/* */

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சி
X

திருச்சி கேம்பியன் பள்ளியில் உலக சாதனைக்கான சதுரங்க விளையாட்டு  பாடம் நிகழ்ச்சியின் முன்னோட்டம் இன்று நடந்தது. இதனை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.

மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த போட்டியை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2108 மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க பாடம் நிகழ்ச்சி நாளை காலை 8 ணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இதனையொட்டி இன்று நடைபெற்ற முன்னேற்பாடு ஒத்திகை நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் பார்வையிட்டு உரிய அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கி .பிரதீப்குமார் மற்றும் கேம்பியன் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 15 July 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்