/* */

நேர்மையின் சிகரம் கக்கனின் மகனுக்கு உதவ முன்வருமா தமிழக அரசு?

நேர்மையின் சிகரம் கக்கனின் மகனுக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நேர்மையின் சிகரம் கக்கனின் மகனுக்கு உதவ முன்வருமா தமிழக அரசு?
X
சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கக்கனின் மகன் பாக்கியநாதன் மனைவியுடன் உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான இவர் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை மற்றும் எளிமையுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவர். அமைச்சர் பதவியில் இருந்த போதும் அவர் ஆடம்பரத்தை விரும்பியது இல்லை. கடைசிவரை அரசு பஸ்ஸில் பயணம் செய்தவர்.

ஒரு முறை இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எதேச்சையாக அவரை கண்ட அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆச்சரியப்பட்டு அவருக்கு நன்றாக சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன் அவர் வசிப்பதற்கு அரசு வீட்டையும் வழங்கினார்.கடைசி வரை நேர்மைக்கு பேர் போனவர் என்ற கக்கன் கடந்த 1981 ஆம் ஆண்டு காலமானார். கக்கனின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அரசு வழங்கிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கக்கனின் மகன் பாக்கியநாதன் (வயது 75) தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சிறுநீரக பிரச்சனையும் இதய கோளாறும் உள்ளது. இதய பிரச்சினைக்காக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ரூ. 4,000 பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை அவரது மனைவியால் செலுத்த முடியவில்லை. மேலும் முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டையும் பாக்கியநாதனுக்கு இல்லை .அந்த கார்டை பெற கக்கனின் பேரன் அதாவது பாக்கியநாதனின் மகன் முயற்சித்து வருகிறார். ஆனால் அது இதுவரை கிடைக்கவில்லை. அதனால் தனது கணவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கான மருத்துவ செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் பாக்கியநாதன் குடும்பத்தினர் உள்ளனர். நாடு சுதந்திரம் அடையும் வரை சுதந்திரப் போராட்ட தியாகி, அதன் பின்னர் அமைச்சரான பின்னரும் நேர்மை, எளிமை என வாழ்க கக்கனின் வாரிசுக்கு உதவ தமிழக அரசு உடனடியாக உதவ முன் வர வேண்டும்.

Updated On: 7 Sep 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!