/* */

சூர்யா சிவா விவகாரத்தில் கனிமொழியின் பெண்ணிய உரிமை வாதம் எங்கே போனது?

சூர்யா சிவா விவகாரத்தில் கனிமொழியின் பெண்ணிய உரிமை வாதம் எங்கே போனது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

சூர்யா சிவா விவகாரத்தில் கனிமொழியின் பெண்ணிய உரிமை வாதம் எங்கே போனது?
X

கனிமொழி எம்.பி.- சூர்யா சிவா

சூர்யா சிவா தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓ.பி.சி. அணி தலைவராக இருந்து வருகிறார். இவர் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் புதல்வர். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா சிவா தந்தையிடம் இருந்து விலகி தனி அரசியல் செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சூர்யா சிவாவுக்கும் சர்ச்சைக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் ஓட்டலில் மது குடித்துவிட்டு ரகளை, தனியார் நிறுவன நிலம் அபகரிப்பு, சமீபத்தில் ஒரு பள்ளியை அபகரிக்க முயன்றார் என்பதாக புகார் என அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். தற்போது இவர் பாரதிய ஜனதாவின் உள் கட்சி விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கும் டெய்சி சரண் என்பவர் பற்றி அவருக்கு கொலை மிரட்டல் கொடுக்கும் வகையில் ஆபாசமாக பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி கட்சியில் இருந்து தற்காலிகமாக காயத்ரி ரகுராம் என்பவரை நீக்கிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு கூட சூர்யா சிவா விவகாரம் தெரியுமா அல்லது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறாரா என தெரியவில்லை. ஆனால் இதுவரை சூர்யா மீது ஆடியோ வெளியீடு சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டும் உண்மை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வின் மூன்றாம் கட்ட பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் குஷ்பு பற்றி ஆபாசமாக அவதூறாக பேசியதாக ஒரு குற்றச்சாட்டு வந்தது.

இந்த ஆடியோ வெளி வந்த உடனேயே குஷ்பு தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம் அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள் தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா? என கேள்வி எழுப்பி இருந்தார். தன்னை தரக்குறைவாக பேசிய சாதிக் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார்.

குஷ்புவின் வருத்தமான ட்விட்டர் பதிவினை பார்த்த தி. மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் மன்னிப்பது கேட்பது போல் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில் பெண்ணாகவும் மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம் ,அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. முதலமைச்சர் மு .க ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வால் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

தான் ஒரு பெண் என்ற அடிப்படையில் சக பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் கனிமொழி பகிர்ந்து கொண்டதை பெண்ணிய ஆர்வலர்கள் கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்கள்.

அத்துடன் இந்த பிரச்சினையை குஷ்பு விடவில்லை .இது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைதை சாதிக் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க போலீசாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் தற்போது சூர்யா சிவா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பெண்ணிய உரிமை பேசும் குஷ்புவும், தனது கட்சியை சேர்ந்த பெண் தலைவர் என்ற அடிப்படையில் கூட இதுவரை இதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அன்று பெண்ணிய உரிமைக்காக தன் சொந்த கட்சி பிரமுகர் என்று கூட பாராமல் கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கோரிய கனிமொழியும் இதுவரை வாய் திறக்கவில்லை. அவரை வாய் திறக்க விடாமல் தடுக்கும் சக்தி எது என தெரியவில்லை. சூர்யா சிவா மீது அவர் சார்ந்து உள்ள கட்சி தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் போலீசாராவது நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

Updated On: 25 Nov 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு