/* */

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
X

அகவிலைப்படி உயர்விற்காக காத்திருக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்.

retired govt transport employees, increase in gratuityதமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியில் இருக்கும் அனைவருக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஓய்வூதியர்கள் நவம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கங்களின் பேரவை பொருளாளர் சந்திரசேகரன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

retired govt transport employees, increase in gratuity2020 மே முதல் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இறந்து போனவர் குடும்பங்கள் பண பலன்களை எதிர் நோக்கி காத்து கிடக்கின்றனர். 1998 முதல் ஓய்வு பெற்றவர்கள் எந்த பலனும் வெறுமனே கிடைக்கவில்லை. நீதிமன்றத்தின் மூலமாகத்தான் அனைத்தையும் பெற்றுள்ளோம். 1998 ஒப்பந்தம் பேசும் போது டிரஸ்ஸரி மூலமாக அரசு ஊழியர் போல் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறினார் ஏற்றுக்கொள்ளத சங்கங்கள். அதன் விளைவாக இன்று ஓய்வூதியர்கள் அனுபவிக்கிறார்கள்.

retired govt transport employees, increase in gratuity2005, 2007 ஒப்பந்த பலன்கள் ஓய்வூதியர்களுக்கு தரவில்லை ஏன் என்று கேட்க நாதி இல்லை. 2007 ல் ஓய்வூதிய குறைபாடுகள் போக்க சீராய்வு குழு அமைக்கப்பட்டது. அப்போது சங்க பிரதிநிதிகள் நிர்வாக பிரதிநிதிகள், 2 கணக்காளர்கள் இருந்தனர். அவர்கள் 2016 க்கு பிறகு இந்த ஓய்வூதிய திட்டத்தை நடத்த முடியாது. மாற்று வழி யோசிக்க வேண்டும் அல்லது அரசே ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 2010 ல் தொழிற்சங்கம் கேட்க வாய்ப்பு இருந்தும் தவற விட்டார்கள். ஆனால் 2005,2007,2010 ஒப்பந்த பலனை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று 2010 ஒப்பந்தத்தில் சேர்த்தார்கள். ஆனால் எந்த சங்கங்களும் இதை கேட்கவில்லை. 2011 க்கு பிறகு வந்த அரசு ஒப்பந்த பலனோடு ஓய்வு பெறும்போது வழங்கும் பண பலன்களையும் நிறுத்தியது.

retired govt transport employees, increase in gratuityஇதன் காரணமாக அதிகாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது. உயர் நீதிமன்றத்தில் தனி நீதியரசர் வழங்கச் சொல்லி பரிந்துரை செய்தார். ஆனால் பொறுப்பாட்சி நம்பகம் அதிகாரிகளுக்கு கொடுத்தால் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டிவரும் என்று உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மேல்முறையீடு செய்தார்கள். வழக்கு எண்W.P11572, 10867/13. அங்கும் வழங்கச் சொல்லி தீர்ப்பானது(21.11.2013) ஆனால் அரசும் நிர்வாகமும் நிதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் சென்றது.அங்கு இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல, இது 1982 ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

retired govt transport employees, increase in gratuityஇந்த சமயத்தில் திருச்சி சங்கம் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்த பலன் தரவேண்டும் என்ற வழக்கை தொடுத்து இருந்தனர். இதில் தனி நீதியரசர் ஒப்பந்த பலன் வழங்க பரிந்துரை செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்ததால் இதை மேல் முறையீடு செய்யாமல் 2013 ஒப்பந்தம் 2015 ல் போடும் போது 21 சதம் வழங்குவதற்கு பதிலாக 15℅ மட்டுமே சங்கங்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றினார்கள். இதல்லாமல் ஓய்வு பெறும் போது பண பலன்கள், லீவு சரண்டர் போன்றவைகளையும், 2016 முதல் அகவிலைப்படியையும் நிறுத்தினார்கள். இதனால் விழிப்புணர்வு ஏற்பட்ட ஓய்வூதியர்கள் இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்து இன்று நீதிமன்ற தீர்ப்பு மூலமே பண பலன்கள் பெற்று வருகிறோம். இல்லா விட்டால் நமது கோவணத்தையும் உறுவி இருக்கும் இந்த அரசுகள்.2005, ல் 515 புள்ளிகளுக்கான தொகையும் 2007 ல 505 புள்ளிக்கான தொகை அடிப்படை ஓய்வூதியத்தில் சேர்த்தது மட்டுமே இதுவரை அரசு செய்துள்ளது.

retired govt transport employees, increase in gratuityதற்போது பல இடையூறுகளுக்கு மத்தியில் பல தடைகளை தாண்டி நீதியரசர் சத்திய நாராயணா 29.8.2022 ல் நவம்பர் 22 முதல் அகவிலைப்படி வழங்க ஆணை பிறப்பித்தார். 2.9.2022 அன்று அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளதோடு என்ன செய்தீர்கள் என்று 25.11.2022 நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்ற உத்திரவாதம் பிறப்பித்து தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்த வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கானதால் அகவிலைப்படி வழங்கிய பிறகே சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

retired govt transport employees, increase in gratuityதற்போதைய அகவிலைப்படி வழக்கில் அரசு காலம் தாழ்த்த முயற்சி செய்வதாக அறிகிறோம். 17.10.2022 முதல் நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்க சபாநாயகர், முதல்வர், நிதி மற்றும் போக்குவரத்து அமைச்சர், செயலாளர்கள் எல்லா கட்சி சட்டமன்ற கொறடா அனைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம்.

retired govt transport employees, increase in gratuityநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது. தெருவில் போராடுவதன் மூலமே இதை பெறமுடியும். எவ்வளவு வரும், எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று இருந்தால் நிதி அமைச்சரும், போக்குவரத்து செயலாளரும் அகவிலைப்படியை ஏப்பம் விட்டு விடுவார்கள். எனவே ஒன்று பட்டு போராட ஓய்வூதியர் சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 17 Oct 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை