ஒற்றைத்தலைமை ஏற்பட்டால் மட்டும் அ.தி.மு.க. மீண்டும் வீறு கொண்டு எழுமா?

ஒற்றைத்தலைமை ஏற்பட்டால் மட்டும் அ.தி.மு.க. மீண்டும் வீறு கொண்டு எழுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஒற்றைத்தலைமை ஏற்பட்டால் மட்டும் அ.தி.மு.க. மீண்டும் வீறு கொண்டு எழுமா?
X

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு இன்று சென்னையில் தொடங்கி உள்ளது. ஒரு கட்சியின் பொதுக்குழுவிற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன் என்பதற்கான காரணம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒற்றை தலைமை விவகாரம்தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.


மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அ.தி.மு.க. எத்தனையோ சோதனைகளை சந்தித்து நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்தது. அவரது மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. பிளவுபட்டது. அந்த பிளவின் காரணமாக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு மீண்டும் உயிர் பெற்று ஆளுங்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் தோல்வி பின்னர் வெற்றி என அ.தி.மு.க.வின் வரலாறு இப்படி வெற்றி தோல்வி என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.


இந்த 50 ஆண்டுகால வரலாற்றில் அ.தி.மு.க. மூன்று முறை பிளவினை சந்தித்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் அ.தி.மு.க. பிளவுபட்டது. பிளவுபட்ட அ.தி.மு.க.வை பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றாக்கினார். ஆனாலும் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியவில்லை.இதற்கு காரணம் ஆண்டாண்டு காலமாக அ.தி.மு.க.வில் இருந்து வந்த ஆளுமைமிக்க ஒற்றை தலைமை தான் காரணம் என முடிவு செய்யப்பட்டது.

கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் இருப்பதால்தான் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஆதலால் ஒற்றை தலைமையாக இருந்து அது ஒருங்கிணைப்பாளர் அல்லது பொதுச்செயலாளர் என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. கடைக்கோடி தொண்டர்கள் முதல் மாநில அளவிலான நிர்வாகிகள் வரை இதே கருத்தையே வலியுறுத்தினார்கள் .இந்த கருத்தினை செயல் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ,இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்தார். அது அவருக்கு சாதகமாக அமைந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்னதான் முயற்சி எடுத்தாலும் எடப்பாடி பழனிசாமியுடன் மோத முடியாமல் வீழ்ந்து கிடக்கிறார்.


பொதுக்குழு உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.வின் கட்சி ரீதியான 70 மாவட்டச் செயலாளர்களில் ஒற்றை இலக்கம் தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை தளபதியாக அதாவது தலைவராக அல்லது பொதுச் செயலாளராக அல்லது ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதற்கு 100 சதவீத வாய்ப்புகள் கனிந்து உள்ளன.

இதனை ஏற்றுக்கொண்டு இதுவரை ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் செயல்படுவாரா?அல்லது கட்சியில் இருந்து விலகுவாரா? அல்லது கட்சியில் இருந்து கொண்டே உள்குத்து வேலைகளில் ஈடுபடுவாரா? என்பது தான் லட்சோபலட்சம் அ.தி.மு.க. தொண்டர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் ஒற்றை தலைமை வந்தால் மட்டும் போதாது எப்படி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் ஒற்றை தலைமையின் ஆணையை ஏற்று மாநில நிர்வாகிகள் தொடங்கி கடை கோடி தொண்டர்கள் வரை களம் இறங்கினார்களோ அதே போன்ற ஒரு ஆளுமையை புதிதாக பதவியேற்க உள்ள ஒற்றை தலைமை பெற வேண்டும் .அப்படி பெற்றால்தான் பலம் இழந்த நிலையில் உள்ள அ.தி.மு.க. மீண்டும் வீறுகொண்டு எழுந்து வெற்றியடைய முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.

அதே நேரத்தில் பதவி இழக்கும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் ஒற்றை தலைமையின் ஆணையை ஏற்று முழுமனதோடு செயல்படுவாரா? அல்லது கட்சியை விட்டு வெளியேறுவாரா?அல்லது கட்சியில் இருந்து கொண்டே உள்குத்து வேலைகளில் ஈடுபடுவாரா?என்ற கேள்வியும் தொண்டர்கள் மனதில் எழாமலில்லை. இவை அனைத்திற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் தொடங்கிய இயக்கத்திற்கு 50 ஆண்டு கால முடிவில் இப்படி ஒரு சோதனை வந்து உள்ளது. 'எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகாலம் இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா தனது மறைவிற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் சூளுரை செய்தார். அந்த சூளுரை நனவாக வேண்டும் என்றால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஒற்றை தலைமை அவரைப் போன்று ஆளுமைமிக்க தலைமையாக இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

Updated On: 2022-06-23T11:27:26+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...