/* */

வாக்காளர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வாக்காளர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
X

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. (பைல் படம்)

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் அலுவலர்களிடம் பகிர்கொள்ளப்பட்டன. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகஸ்டு 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி வாக்காளர் பதிவு விதிகளில் 26 பி என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, வக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம். இந்த திட்டத்தின் நோக்கம் தற்போது சட்டமாக்கப்பட்டு இருப்பதால், ஆதார் எண்ணை வாக்காளர்கள் தானாக முன்வந்து அளிக்க வேண்டும். நேரடியாக ஆதார் எண்ணை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை 1.4.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?