/* */

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையுமாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைய விருதுநகர்  கலெக்டர் வேண்டுகோள்
X

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

சுகன்ய சம்ரிதி திட்டம் என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும்.

இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.இந்த திட்டத்தின்படி, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்கலாம்.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.

குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 250ஃ-இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250ஃ- ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம்.

மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும். தற்பொழுது 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. கணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்து 21 வருடம் கழித்து கணக்கு முதிர்வடையும். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து 50 சதவிகித பணத்தை அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணக்கு முதிர்வடைவதற்கு முன்பே கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.இந்த கணக்கை முதிர்வடைவதற்கு முன், கணக்கை முடித்து முன் முதிர்வு தொகையினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கூடுதல் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அதிகாரி விருதுநகர் - 04562-243232, சிவகாசி - 04562- 220150, அருப்புக்கோட்டை - 04566 - 220503, ராஜபாளையம் - 04563- 222240 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் அல்லது அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இன்றே இத்திட்டத்தின் கீழ் கணக்கைத் துவங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது


Updated On: 8 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  3. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  6. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  7. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  8. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  9. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!
  10. நாமக்கல்
    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு