/* */

கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களுக்கு, இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி  எண் அறிவிப்பு
X

கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான புகார்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை, கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976ஆம் வருட, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட குற்றச் செயலாகும்.

தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் (Toll Free Help line)/1800 4252 650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தான் வாங்கிய கடனுக்காகவோ அல்லது முன்பணத்திற்காகவோ அல்லது சில சமூக கடமைகளுக்காகவோ அவரின் விருப்பப்பட்ட இடத்திற்கு செல்லும் உரிமை, விருப்பப்பட்ட வேலை செய்யும் சுதந்திரம் மற்றும் தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தை நிலவர மதிப்பின்படி விற்பனை செய்யும் உரிமை ஆகியவற்றை இழந்திருந்தாலோ அல்லது உடல் சார்ந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலோ அது தொடர்பான புகார்களை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி