விருதுநகர்: ஆமத்தூர் கண்மாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விருதுநகர்: ஆமத்தூர் கண்மாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

கண்மாய் சீரமைக்கக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுத்த ஆமத்தூர் பகுதி கிராமத்தினர்.

இது தொடர்பாக, விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆமத்தூர் கண்மாய்க்கு நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாய் ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும். கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை அகற்றி அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால்தான், பிற்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய தயங்குவார்கள். தற்போது கண்மாய் இயல்பு நிலையை விட 3 மீட்டர் அளவிற்கு மண் மேவி உள்ளது. எனவே கண்மாயை ஆழப்படுத்தும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். உபரிநீர் செல்லும் கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மேற்படி வரைப்படத்தில் கண்டுள்ளபடி சீரமைக்க வேண்டும். கால்வாயில் பயிர் செய்வதை தடுக்க வேண்டும். இந்த வேலைகளை முறையாக செய்தால் மட்டுமே, கண்மாயானது மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 15 Sep 2021 12:30 PM GMT

Related News