/* */

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

விருதுநகர் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் வேட்பாளர்கள் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளின் மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் முற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர்கள் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திருச்சுழி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தங்கம் தென்னரசு, மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் இராஜபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரிக்குச் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் காவல்துறையினரிடம் வாக்குப்பதிவு இயந்திரத்திரங்கள் பாதுகாப்பு குறித்து விபரங்களை கேட்டறிந்தனர்.

Updated On: 17 April 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்