/* */

சிவகாசியில் போலீஸாருக்கான இலவச கண் மருத்துவ முகாம்

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சிவகாசியில் போலீஸாருக்கான  இலவச கண் மருத்துவ முகாம்
X

சிவகாசியில், போலீசாருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில், சிவகாசி காவல் சரகத்தில் உள்ள சிவகாசி நகர், சிவகாசி கிழக்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், மாரனேரி, திருத்தங்கல் மற்றும் எம்.புதுப்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 250க்கும் மேற்பட்ட காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை அணில்குமார் கண் மருத்துவமனை மற்றும் காவல் துணை கண்காணப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

உடல் நலன் பேணுவதற்காக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்... காவல்துறையின் நடவடிக்கைக்கு வரவேற்பு...

காவலர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது போல இனி அவர்களின் வாழ்க்கை துணைவியாருக்கும் அளிக்கப்படும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனையும் இதில் சேர்க்கப்படும். காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 7 மாநகரங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்க தலா ரூபாய் இரண்டு லட்சம் வீதம் ரூபாய் 90 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையரகம் என்ற அடிப்படையில் தாம்பரம் காவல்துறை ஆணையரகம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி உருவாக்கப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையராக கட்டுப்பட்டில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 16 போக்குவரத்து காவல் நிலையங்கள் என 36 காவல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு மற்றம் சைபர் க்ரைம் பிரிவுகளும் உள்ளன.

தாம்பரம் காவல் ஆணையரக சரகத்தில் உள்ள 36 காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு வாரமும் கட்டாயம் உடல் எடை பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி அனைத்து காவல் நிலையங்களில் வாரந்தோறும் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் மருத்துவ உதவியாளர் எடை பரிசோதனை இயந்திரம் மூலம் அனைத்து காவலர்களும் எடை பரிசோதனை செய்து வருகின்றனர். மீண்டும் அடுத்த வாரம் எடை பரிசோதனை செய்யும் போது, முந்தைய வாரம் எடுத்த எடை அளவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது, எடை குறைந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனே அரசு மருத்துவர் ஆலோசனைக்கு அனுப்பப்படுகிறார்.

அதன்படி சம்பந்தப்பட்ட காவலருக்கு உடல் குறித்து பரிசோதனை செய்து எடை குறைவதற்கான காரணத்தை அறிந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று குரோம்பேட்டை காவல் நிலையம் போலீசார் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எடை பரிசோதனை செய்தனர். தாம்பரம் கமிஷனர் உத்தரவுப்படி ஒவ்வொரு வாரமும் கட்டாயம் அந்தந்த காவல் நிலையங்களில் எடை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் போலீசாரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Updated On: 21 March 2023 1:33 AM GMT

Related News