/* */

திருவில்லிபுத்தூர் அருகே தொடர் திருட்டு: 3 பேர் கைது

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப்பிடிக்க, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூர் அருகே தொடர் திருட்டு: 3 பேர் கைது
X

பைல் படம்

திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த சிவமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது. அதே நாளில் மதுரை சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஸ்மார்ட் டிவி திருடு போனது.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப்பிடிக்க, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கோவில்மதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் (30), மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42), ஈரோடு மாவட்டம், அக்கரைபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (32) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை போலீசார் கைப்பற்றினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 1 Sep 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!