வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரம்
X

வத்திராயிருப்பு பகுதியில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், ரஹ்மத் நகர், கிழவன் கோவில், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக முதல் போக நெல் சாகுபடியை தற்போது தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். நீர்பிடிப்பு பகுதியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால், மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது கண்மாய்களில் நீர் குறைந்து வருவதால், சற்று வேதனையாக இருந்தாலும், கிணற்று நீரை வைத்து நடவு பணியை தொடங்கியுள்ளோம். எந்திர நடவு மற்றும் ஆட்களை கொண்டு நடவு பணியினை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறினர்.

Updated On: 20 Sep 2021 7:30 AM GMT

Related News