தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
X

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்

மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மலைக் கோவிலுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

கடந்த ஐப்பசி மாத அமாவாசை, பௌர்ணமி மற்றும் கார்த்திகை மாத அமாவாசை தினங்களில், மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக பக்தர்கள் பாதுகாப்பு கருதி சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெரியளவில் மழை பெய்யாமல் இருந்ததால், கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷம் வழிபாடுகளுக்காக சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோவிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி, இன்று வளர்பிறை பிரதோஷம் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர். சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நம்பிக்கையுடன் வந்த பக்தர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இன்று கார்த்திகை மகாதீபம், நாளை பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சுந்தரமகாலிங்கம் சந்நிதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு. இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது.

கோவில் திருவிழாக்கள்:ஆடி அமாவாசை திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி மற்றும் தை அமாவாசை, மார்கழி மாத இதர அமாவாசை , பவுர்ணமி நாட்கள் போன்ற நாட்களில் விஷேசமாக இருக்கும்

கோவில் பிராத்தனை: திருமணத்தடை, குழந்தைபாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரதிக்கலாம். இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணட்து.மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.


Updated On: 2022-12-07T10:09:31+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...