சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கக் கோரி விசிக மறியல்

VCK picket at the Sivakasi Corporation office demanding to place a picture of Ambedkar

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கக் கோரி விசிக மறியல்
X

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கக்கோரி, விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படம் வைக்கக்கோரி, விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர், துணை மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பமும், விக்னேஷ் பிரியாவும் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கவுன்சிலர்களாக தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில், திமுக தலைவர்கள் படங்கள் இருக்கும் நிலையில், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் படத்தையும் வைக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டுவந்து, அம்பேத்கர் படத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிடச் செய்தனர். விசிக கட்சியினர் நடத்திய திடீர் முற்றுகை போராட்டத்தால், சிவகாசி மாநகராட்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Jun 2022 9:15 AM GMT

Related News