சிவகாசியில், வைகாசி விசாகம் திருநாள் கோலாகலம்:சிறுவர், சிறுமியர் காவடி எடுத்து பாதயாத்திரை பயணம்

சிவகாசியில், வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் காவடி எடுத்து, பாதயாத்திரை சென்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசியில், வைகாசி விசாகம் திருநாள் கோலாகலம்:சிறுவர், சிறுமியர் காவடி எடுத்து பாதயாத்திரை பயணம்
X

சிவகாசியில், வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு காவடி எடுத்து, பாதயாத்திரை புறப்பட்ட சிறுவர், சிறுமியர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வைகாசி விசாகம் திரு நாளை முன்னிட்டு சிறுவர், சிறுமிகளும் காவடி எடுத்து பாதயாத்திரை புறப்பட்டது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சிவகாசி காத்த நாடார் தெருவில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் இருந்து, 9ம் ஆண்டு குழந்தை வேலன் காவடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். சிவகாசி கருப்பசாமி கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், ஸ்ரீஅய்யா நாராயணன் கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு, திருத்தங்கல் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

வைகாசி விசாகம் திருநாளில் குழந்தைகள் ஆர்வமுடன் காவடி எடுத்து, உற்சாகத்துடன் பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழந்தை வேலன் பாதயாத்திரைக்குழு நிர்வாகிகள் முன்னின்று சிறப்பாக செய்திருந்தனர். இந்த குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Updated On: 13 Jun 2022 10:34 AM GMT

Related News