இளைஞரை கொலை செய்து முட்புதரில் சடலம் வீச்சு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சிவகாசி அருகே ரிசர்வ்லயன் வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கழுத்து அறுபட்ட நிலையில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவநீதகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று பகலில் குடித்துவிட்டு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரது தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

இந்த சமயம் பார்த்து அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் வைத்து நவநீதகிருஷ்ணனை கட்டையால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அந்த உடலை அங்கேயே விட்டு விட்டுச் செல்லாமல் அவர்களது மோட்டார்பைக்கில் வைத்து அருகில் உள்ள பூவநாதபுரம் பகுதியில் உள்ள முட்புதரில் வீசி சென்றுள்ளனர். இந்நிலையில் கடைக்குச் சென்ற தாய் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதில் கொலை செய்த 4 பேரும் அருகில் உள்ள எம். புதுப்பட்டி போலீசில் சரணடைந்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்தும் முன்பகை காரணமாக காெலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 2. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 3. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து: ஆவணங்கள்...
 4. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல் குறித்து...
 5. காஞ்சிபுரம்
  ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில்...
 6. சினிமா
  அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
 7. தஞ்சாவூர்
  தஞ்சாவூரில் புத்தகக்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
 8. புதுக்கோட்டை
  புதுக்கோட்டைக்கு வந்த எம்எல்ஏ உதயநிதிஸ்டாலினை வரவேற்ற ஆட்சியர்
 9. உத்திரமேரூர்
  மாஸ்க் அணியாதவர்களை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்
 10. காஞ்சிபுரம்
  திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்