அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பேருந்து - தொடங்கி வைத்த உதவி ஆட்சியர்.

Axis Bus for Government Hospital - Started Assistant Collector.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பேருந்து - தொடங்கி வைத்த உதவி ஆட்சியர்.
X

சிவகாசியில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பள்ளிப் பேருந்தை நிர்வாகம் வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஹயக்ரிவாஸ் மற்றும் ஜேசிஐ தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கிய உயிர் காக்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தை உதவி ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

சிவகாசியில் உள்ள ஹயக்ரிவாஸ் சர்வதேச பள்ளியும், சிவகாசி ஜேசிஐ டைனமிக்கும் இணைந்து ஐந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வசதியுடன் கூடிய பள்ளிப் பேருந்தை தற்காலிக கொரோனா வார்டாக மாற்றி சிவகாசி அரசு மருத்துவனைக்கு வழங்கியுள்ளனர். இந்த பேருந்தில் 3.25 லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் பத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க முடியும். மேலும் காற்றோட்டத்திற்காக மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து கொரோனா தொற்று முடியும் வரை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சார்ஆட்சியர் தினேஷ்குமார் ஐஏஎஸ், சிவகாசி அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#Instanews #tamilnadu #Sivakasi #hospital #collector #ஆக்சிஜன் #oxygen #ஐஏஎஸ் #ias

Updated On: 2021-05-17T16:36:37+05:30

Related News

Latest News

 1. சினிமா
  Zee Tamil சீரியல் நடிகைகளின் பெயர் பட்டியல்
 2. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 3. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 4. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 5. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 7. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 10. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்