Begin typing your search above and press return to search.
சிவகாசி சித்தர் கோயிலில் சிறப்பு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பாம்பாட்டி சித்தர், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் பக்தர்கள் சபை கோயிலில் விழா நடந்தது
HIGHLIGHTS

சிவகாசி சித்தர் கோயிலில் சிறப்பு அன்னதானப் பெருவிழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபாம்பாட்டி சித்தர் கணக்கன்பட்டி ஸ்ரீமூட்டை சுவாமிகள் பக்தர்கள் சபை கோயிலில் பூரட்டாதி அன்னதானப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீபாம்பாட்டி சித்தர், ஸ்ரீசிவப்பிரபாகர சித்த யோகி, ஸ்ரீமூட்டை சுவாமி, ஸ்ரீசித்தராஜர் சுவாமிகளின் உருவப் படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூரட்டாதி அன்னதானப் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பக்தர்கள் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.