சிவகாசியில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சிவகாசி நகராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசியில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

மாற்று திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கடந்த சில வாரங்களாக அதிக அளவில் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவகாசி நகராட்சியின் பழைய அலுவலக கட்டிடத்தில் ஊனமுற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாமினை அசோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 64 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சிறப்பு முகாமுக்கு வர முடியாத ஊனமுற்றவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் 272 பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

முகாமில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், டாக்டர் வைரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஊனமுற்றவர்களின் வசதிக்காக திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பள்ளி, தாலுகா அலுவலகம், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், எரிச்சநத்தம், கிருஷ்ணபேரி, மங்களம், வடமலாபுரம், ஆலமரத்துப்பட்டி, நாரணாபுரம், மாரனேரி, விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 265 பேர் பயன் பெற்றனர்.

Updated On: 9 Aug 2021 7:15 AM GMT

Related News