/* */

தீபாவளிக்கு ரூ.4300 கோடி பட்டாசு வர்த்தகம்: உற்பத்தியாளர் சங்க தலைவர்

இந்தியாவின் 90 % பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 % குறைவாகவே நடந்துள்ளது.

HIGHLIGHTS

தீபாவளிக்கு  ரூ.4300 கோடி  பட்டாசு வர்த்தகம்: உற்பத்தியாளர் சங்க தலைவர்
X

சிவகாசி பட்டாசு 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 4300 கோடி ரூபாய் வரை பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன் பஞ்சுராஜன் கூறியுள்ளதாவது :-

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைவாகவே நடந்துள்ளது. 70சதவீத பட்டாசு உற்பத்தி மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசு நாடு முழுவதும் சுமார் ரூ. 4300 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.ஆனால், கொரோனோ பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது ஆண்டாக பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு முழுமையான வர்த்தகம் நடைபெறும் நம்பிக்கையுடன் உற்பத்தி பணியை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 6 Nov 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!