/* */

சிவகாசியில் சித்திரை திருவிழாவுக்கு முன்பு சாலைகளை சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் மே மாதம் 3ம் தேதி (செவ்வாய் கிழமை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது

HIGHLIGHTS

சிவகாசியில் சித்திரை திருவிழாவுக்கு முன்பு சாலைகளை சீரமைக்க கோரிக்கை
X

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு முன்பாக சாலைகளை சீரமைக்க கோரிக்கை.

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு முன்பாக சாலைகளை சீரமைக்க கோரிக்கை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் முக்கிய இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நகரின் முக்கிய சாலையான திருத்தங்கல் சாலை, தேவர் சிலை பகுதி, நாடார் லாட்ஜ் பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கின்றது. சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் சிவகாசி நகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் கடும் நெருக்கடியில் சிக்குகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் திருத்தங்கல் சாலையில் உள்ள, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமானஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் மே மாதம் 3ம் தேதி (செவ்வாய் கிழமை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவிழா துவங்கியவுடன் தினமும் கோவிலிலிருந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் வாகனத்தில் எழுந்தருளி, கடைக்கோவில் வந்தடைந்து ரதவீதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அதே போல சிவகாசி நகர் பகுதி மற்றும் திருத்தங்கல் பகுதியிலிருந்து வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் திருத்தங்கல் சாலை வழியாகத்தான் கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும். திருவிழா துவங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. திருவிழா துவங்குவதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து, திருத்தங்கல் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஸ்ரீபத்திரகாளியம்மன் பக்தர்கள் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 22 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  9. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...