ஜெயலலிதாவை எண்ணி கண்கலங்கிய ராஜேந்திர பாலாஜி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜெயலலிதாவை எண்ணி கண்கலங்கிய ராஜேந்திர பாலாஜி
X

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவை எண்ணி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்கலங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதா கண்ட கனவு ஜெயிக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என கூறிய பின்னர் ஜெயலலிதாவின் பல்வேறு சிறப்புகளை பற்றி பேசிய ராஜேந்திர பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார். எனக்கென தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. அம்மாவின் செல்வாக்கை பெற்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எனக்கு சீட் வழங்கப்பட்டு நான் வெற்றி பெற்றேன்.

நான் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது ஒவ்வொரு மணி நேரமும் ஜெயலலிதா தொலைபேசியில் என் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். கோடிகோடியாய் சம்பாதித்த கருணாநிதி குடும்பம் உத்தமர் வேஷம் போடுகிறது. ஜெயலலிதாவிற்கு பின்னர் கட்சி என்ன ஆகுமோ என நினைத்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த நான்கு ஆண்டுகள் கட்சியை வழி நடத்தி இருக்க முடியாது.பட்டாசு தொழில் மீது இருந்த ஜிஎஸ்டி வரியை குறைக்க துணை நின்றவன் நான். தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.

Updated On: 2021-03-31T10:17:59+05:30

Related News