சிவகாசியில் நட்சத்திர ஆமையை விற்க முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்

நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேரிடமும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசியில்  நட்சத்திர ஆமையை விற்க முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்
X

விருதுநகர் மாவட்டம்,சிவகாசியில் நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேர் பிடிபட்டனர்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிரஷாந்த் ( 23), மகேந்திரன் (23) ஆகிய 2 பேரும் நட்சத்திர ஆமையைக் கொண்டு வந்து சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் (23) நிதின் (20) ஆகியோரிடம் விற்பனை செய்ய பேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 4 பேரையும் பிடித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்து சிவகாசி வனச்சரக பொறுப்பு அலுவலர் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேரிடமும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 18 July 2021 12:15 PM GMT

Related News