பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் காயம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் காயம்
X

சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 80 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ரசாயன கலவை செய்யும் பணியின் போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஆதிலட்சுமி , செந்தி, முத்துமாரி, சுந்தரபாண்டி ஆகிய 4 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்து வந்த சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வச்சக்காரப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் 8 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இது என்பதும் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 2021-04-16T10:23:15+05:30

Related News