/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி ஒருவர் பலி

விபத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து:  தொழிலாளி ஒருவர் பலி
X

வெடிவிபத்து நடந்த இடத்துக்கு சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சாத்தூர் அருகே இன்று காலை, பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளிர் ஒருவர் பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்தப் பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை, பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வருவதற்கு முன்பாக, மருந்து கலவை செய்யும் பணியாளர்கள் 3 பேர் மட்டும் பட்டாசு ஆலைக்குள் மருந்து கலவை செய்வதற்காக வந்தனர். சக்கரம் வெடி தயாரிப்பதற்கான மருந்து கலவை செய்யும் பணியில், சுந்தரக்குடும்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலை விக்னேஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூலப் பொருட்களில் உராய்வு ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை செய்யும் அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.



இந்த விபத்தில் சிக்கிய சோலை விக்னேஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த சோலை விக்னேஷ் உடல் மீட்கப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அம்மாபட்டி காவல்நிலைய போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலைக்குள், காலை நேரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பட்டாசு ஆலைகளில், மருந்து கலவை செய்யும் பணிகள் அதிகாலையில், வெயிலின் கடுமை வருவதற்குள் செய்து முடிக்கப்படுகிறது. இருந்தாலும் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  4. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  6. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  7. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  8. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  10. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?