சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ விபத்து: கூரை செட் சேதம்

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை ஷெட் சேதமடைந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விழுந்ததால் தீ விபத்து: கூரை செட் சேதம்
X

பட்டாசு வெடித்ததால்  ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள். 

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் வாழைக்கிணறு வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் உமா (50). இவர் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஸ்டாண்டர்டு காலனியில் இவரது வீட்டின் அருகே கூரை செட் அமைத்திருந்திருக்கிறார். இன்று காலை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடித்துச் சிதறி, அங்கிருந்த கூரைசெட் மீது விழுந்து, தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கூரைசெட் எரிந்து பலத்த சேதமானது. தீப்பிடித்த கூரைசெட்டில் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 11:57 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  Zee Tamil சீரியல் நடிகைகளின் பெயர் பட்டியல்
 2. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 3. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 4. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 5. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 7. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 10. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்