சிவகாசி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி: மேயர் ஆய்வு

சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி: மேயர் ஆய்வு
X

சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி மாநகராட்சி பகுதியில், புதிய தார் சாலையை மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 34ம் வார்டு பகுதியான மாநகராட்சி காமராஜர் பூங்கா அருகில், தேவர் சிலை அருகில், பசும்பொன் நகர் பகுதியில் தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்று, அந்தப்பகுதியில் தோண்டப்பட்டிருந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். டெண்டரில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி சாலை அமைக்கப்படுகின்றதா என்பதை, மேயர் சங்கீதா இன்பம் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். சாலை பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மேயர் கூறினார்.

Updated On: 22 Jun 2022 12:31 PM GMT

Related News