ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு

விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு
X

ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் புகுந்த நல்லபாம்பு

ராஜபாளையம் அருகே, விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள, வேட்டைபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் நெல் விவசாயம் செய்து வந்த பாலசுப்பிரமணியன், அறுவடையான நெல் மணிகளை பிளாஸ்டிக் ட்ரம்களில் போட்டு வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியனின் மனைவி ஜோதி (35), வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்பில் இருந்து, கயிறு போன்று நீளமாக ஒன்று அசைவதைப் பார்த்து பயந்து போனார். உடனடியாக இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்மின் மூடியை திறந்தனர். அதில் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று இருந்ததை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியின் மூலம், நெல் மணியில் பதுங்கியிருந்த நல்லபாம்பை உயிருடன் மீட்டு, மேற்கு தொடர்ச்சிமலை காட்டுப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Updated On: 25 Jan 2023 9:30 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...