ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ராஜபாளையம் அருகே  ரேஷன் அரிசி  கடத்திய    3 பேர்  கைது
X

ராஜபாளையம் அருகே, ரேசன் அரிசி மூடைகள் கடத்திய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில், உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ எடையுள்ள 25 மூடை ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ரேசன் அரிசி மூடைகளை கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (36), வரதன் (21) மற்றும் அரிசி ஆலை நடத்தி வரும் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 25 மூடை ரேசன் அரிசி மற்றும் ரேசன் அரிசி மூடைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட சுடலைமணி என்பவர் தென்காசி மாவட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் என்று தெரிய வந்தது.

Updated On: 19 March 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி