/* */

சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு வீட்டில் வெடிவிபத்து: ஒருவர் சாவு; 7 பேர் காயம்

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்; 7 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு வீட்டில் வெடிவிபத்து: ஒருவர் சாவு; 7 பேர் காயம்
X

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து நடந்த வீடு.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவை சேர்ந்த பாலமுருகன் (55), என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாக இன்று (செப். 10) பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று பட்டாசு தயாரிப்பின்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சார்ந்த சண்முகராஜ் (52), செல்வி (35), முத்துச்செல்வி (35) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த ரொம்பகோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தனியார் தண்ணீர் வாகனத்தின் உதவியுடன் தீயை அணைத்தனர். இதையடுத்து இந்த வெடி விபத்தில் காயமடைந்த முத்துச்செல்வி, செல்வி உள்ளிட்டோர் லேசான காயத்துடன் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பலத்த காயமடைந்த சண்முகராஜ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  2. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  3. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  5. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  6. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  7. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  10. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...