/* */

சிவகாசி அருகே ஆலைத் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை

HIGHLIGHTS

சிவகாசி அருகே ஆலைத் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
X

 சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டார்.

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கழுத்தையறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 திருநங்கைகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பேருந்து நிலையம் அருகே, நகராட்சி இடுகாடு எனும் பிள்ளைகுழி உள்ளது. இந்த பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, சிவகாசி நகர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் திருத்தங்கல், தேவராஜ் காலனி பகுதியைச் சேர்ந்த டேவிட் (38) என்பது தெரியவந்தது. கொலையான டேவிட்டிற்கு சுபா என்ற மனைவியும், 10 வயது மகளும் உள்ளனர். பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த டேவிட், சிவகாசி இடுகாட்டிற்கு ஏன் வந்தார், அவரை யார் கழுத்தையறுத்து கொலை செய்தனர், பணத் தகராறில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டார். பட்டாசு தொழிலாளி படுகொலை சம்பவத்தில் ஆதாரங்களை சேகரிக்க தடயவிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். விருதுநகரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் 2 திருநங்கைகளை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தொழிலாளி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  2. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
  3. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  4. வீடியோ
    🔴LIVE : தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...
  5. சூலூர்
    பண அரசியலை கோவையில் இருந்து ஓட்டியாக வேண்டிய நேரம் : அண்ணாமலை
  6. வீடியோ
    🔴LIVE : ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள்...
  8. கோவை மாநகர்
    பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? : வானதி சீனிவாசன் விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    பாஸ்தாவின் சுவையான உலகம்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு