/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை

சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளரின் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி:  அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை
X

சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் சுகுணா(52) .இவரது கணவர் நாகராஜ் (58) என்பவர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். சுகுணா சாத்தூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை அடுத்து இவரது கணவர் நாகராஜ் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இந்தநிலையில் 19வது வார்டு பகுதியில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகுணா என்பவர் 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவை விட 280 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து இந்த மனமுடைந்த நாகராஜ் விஷம் அருந்தியுள்ளார் இதனை அறிந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Feb 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?