உதயநிதி பிறந்தநாள்: ராஜபாளையத்தில் திமுக சார்பில் ரத்ததானம்

முகாமில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உதயநிதி பிறந்தநாள்: ராஜபாளையத்தில் திமுக சார்பில் ரத்ததானம்
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்:

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொகுதியில் நகர மாணவர் அணி சார்பாக கழக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44 -வது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மகப்பேறு மருத்துவமனையில் 44 நபர்கள் ரத்த தானம் வழங்கும் இரத்த தான முகாம் நடைபெற்றது, இம்முகாமில், சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் , இந்நிகழ்வில் இராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனையில் எலும்பு சம்மந்தப்பட்ட அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள பயன்படும் சி.ஆர். கருவி பழுதடைந்துள்ளதாகதலைமை மருத்துவர் கூறியதையடுத்து. எம்.எல்.ஏ. சென்னையிலுள்ள டி.எம்.எஸ். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏழை எளிய பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக பழுதடைந்த கருவியை பழுதுபார்த்து தருமாறு அல்லது புதிய கருவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு மருத்துவ இயக்குநர் இருதினங்களில் கருவியை பழுதுபார்த்துதரப்படும் அல்லது புதிய கருவி வழங்கப்படும் என உறுதியளித்தார் அதற்கு, எம்.எல்.ஏ. அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில், தலைமை மருத்துவர் சுரேஷ், திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாணவரணி நிர்வாகிகள் இக்சாஸ் இப்ராஹிம், நாகேஷ்வரன் மதன் அருண் உலகநாதன் சத்தியமூர்த்தி கார்த்திக் பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Dec 2021 7:30 AM GMT

Related News