/* */

சாலைகளில் திரிந்த மாடுகளால் விபத்து :கோசாலையில் சேர்த்த வட்டாட்சியர்

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை கோசாலைக்கு கொண்டுசென்றபோது உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதம்.

HIGHLIGHTS

சாலைகளில் திரிந்த மாடுகளால் விபத்து :கோசாலையில் சேர்த்த வட்டாட்சியர்
X

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்.(மாதிரி படம்)

இராஜபாளையம் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளால் பலர் விபத்துக்குள்ளாகினர். 50க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து வட்டாட்சியர் கோசாலையில் சேர்த்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் ரோடு , பழைய பேருந்து நிலையம் ,பஞ்சு மார்க்கெட் போன்ற பகுதிகளில் வளர்ப்பு மாடுகள் பகல் நேரம் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துக் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்களில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் வட்டாட்சியர் நள்ளிரவில் வீதிகளில் சுற்றித் திரிந்த 50க்கு மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் உதவியுடன் பிடித்து லாரிகளில் ஏற்றி கோசாலை கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்து வந்த மாட்டு உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .மாடுகளை பிடித்தவுடன் வரும் நீங்கள் மாடுகளை ஏன் வீட்டில் கட்டிவளர்க்கவில்லை என கூறி அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இனிமேல் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அபராதம் போட்டுவிடுவேன் என உரிமையாளர்களிடம் மாடுகளை அழைத்து செல்லுங்கள் என எச்சரித்து அனுப்பினார்.

Updated On: 30 Dec 2021 2:34 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்