தொகுதி மாறிய ஒரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-தங்கபாண்டியன்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொகுதி மாறிய ஒரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-தங்கபாண்டியன்
X

அதிமுகவின் 33 அமைச்சர்களில் தொகுதி மாறிய ஒரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தங்கப்பாண்டியன் போட்டியிடுகிறார். அவர் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, சிவகாசியில் 10 வருடங்களாக செயல்பட்டு, தொகுதி மாறி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டுமே. தமிழகத்தில் உள்ள 33 அதிமுக அமைச்சர்களில் இவர் மட்டுமே தொகுதி மாறி வந்துள்ளார். அவர் அமைச்சராக இருந்து சிவகாசி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

சிவகாசியில் வாக்கு கிடைக்காது என்பதால், ராஜபாளையத்திற்கு பணப் பெட்டியுடன் வந்துள்ளார். அவரிடம் உள்ள பணத்தை பெற்றுக் கொண்டு அவரை வெறும் பெட்டியுடன் மீண்டும் சிவகாசிக்கு வழியனுப்ப பொது மக்கள் தயாரா ?நீங்கள் அமைச்சருக்கு வாக்களிக்க வேண்டும் என எண்ணினால், சிவகாசி தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேளுங்கள். அதில் ஒருவர் அமைச்சருக்கு வாக்களிக்கலாம் என கூறினாலும் நான் அரசியலை விட்டே விலக தயாராக உள்ளேன். அவர் இவ்வாறு செய்வாரா என தங்கப்பாண்டியன் பேசினார்.

Updated On: 30 March 2021 6:00 AM GMT

Related News