ராஜபாளையம்: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு, போலிசார் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராஜபாளையம்: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
X

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழப்பு தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள சோமையாபுரத்தை சேர்ந்த ஜனகன் என்பவரது மனைவி பொன்னழகு 32 இவரது கணவர் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் நிலையில், பொன் அழகு தனது மகள்கள் இருவருடன் வசித்து வந்தார். இந் நிலையில் பகல் சுமார் ஒரு மணி அளவில் மருந்து வாங்குவதற்காக பொன்னழகு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். காந்தி சிலை அருகே இவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சேலத்தில் இருந்து கடையத்திற்கு சோப்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி இவரது வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில் நிலைகுலைந்து தவறி விழுந்த இவரின் தலையில் லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். இவரது உடலை கைப்பற்றிய தெற்கு காவல் நிலைய போலிசார் உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த முருகேசன் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 11:04 AM GMT

Related News