/* */

பல ஆண்டுகளுக்குப்பிறகு இராஜபாளையம் நகராட்சி மீண்டும் திமுக வசமானது:அமைச்சர் மகிழ்ச்சி

நீண்டநாள் எங்கள் கைவிட்டு போன இராஜபாளையம் நகராட்சி தற்போது கைப்பற்றி உள்ளோம் என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன்

HIGHLIGHTS

பல ஆண்டுகளுக்குப்பிறகு  இராஜபாளையம் நகராட்சி மீண்டும் திமுக வசமானது:அமைச்சர் மகிழ்ச்சி
X

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.

இராஜபாளையம் நகராட்சி நீண்டநாள் எங்க கைவிட்டு போனது தற்போது அமோக வெற்றி பெற்று கைப்பற்றி உள்ளோம் என பெருமிதம் தெரிவித்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 42 வார்டுகளிலும் சேத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் அதிகப் படியான இடங்களை பிடித்து திமுக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது .இதை அடுத்து திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இராஜபாளையம் நகராட்சி பல ஆண்டுகளாக கைப்பற்ற நினைத்தோம் ஆனால் எங்கள் கையை விட்டு போனது. தற்போது அமோக வெற்றியுடன் கைப்பற்றி உள்ளோம் . அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளும் .சிவகாசி மாநகராட்சியையும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது .

தமிழகம் முழுவதும் திமுகவுக்கு மக்கள் ஆதரவளித்து உள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இராஜபாளையம் நகராட்சியை பலமுறை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் கையை விட்டு நழுவி போனது. தற்போது எங்களுக்கு அமோக வெற்றியுடன் கிடைத்துள்ளது. அதற்கு இராஜபாளையம் மக்களுக்கு நன்றி. அவர்கள் எங்களுக்கு எந்த எண்ணத்தில் வாக்களித்தார்களோ அதன்படி அவர்களுக்கு பணிகளை சிறப்பாக செய்வோம்.. தற்போது நடந்துள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக வெற்றி பெற்றதற்கு எங்களது முதல்வர் ஸ்டாலின் அவருடைய செயல்பாடும் மக்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 22 Feb 2022 4:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்