இராசபாளையம்: ஐயப்பன் திரு வீதி உலா, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை

ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் கன்னி பூஜை மற்றும் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசபாளையம்: ஐயப்பன் திரு வீதி உலா, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
X

இராஜபாளையத்தில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்தி பஜனை சேவா சங்கம் சார்பில், உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடை பெற்றது. ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் கன்னி பூஜை மற்றும் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயில் வில்லாளிவீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில், 108 சுமங்கலி திருவிளக்கு பூஜையும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரவு ஐயப்ப சுவாமி கன்னி பூஜை மற்றும் நாமசங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. பின்னர், அதிகாலையில் கஜபூஜை அதைத் தொடர்ந்து, ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஐயப்ப சாமி நகரின் முக்கிய வீதிகளளான பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அம்பல புளி பஜார், சங்கரன்கோவில் முக்கு, மற்றும் தென்காசி சாலை வழியாக அன்னதான பந்தலுக்கு மதியம் வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஐயப்பனின் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.Updated On: 12 Dec 2021 3:36 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு