/* */

other party members joined admk விருதுநகரில், மாற்றுக் கட்சியிலிருந்து, அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்:

other party members joined admk விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் மாற்றுக்கட்சியினர் பலர் இணைந்தனர்.

HIGHLIGHTS

other party members joined admk   விருதுநகரில், மாற்றுக் கட்சியிலிருந்து, அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்:
X

சிவகாசியில், முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமு வில் சேர்ந்த மாற்றுக் கட்சியினர்.

other party members joined admk

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அமைச்ச.ராஜேந்திரபாலாஜி தலைமையில்மாற்றுக் கட்சியினர் அதிமுக கட்சியில் சேர்ந்தனர். மாற்றுக் கட்சியினருக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் .ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,


சிவகாசியில் மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார் .

கடந்த அதிமுக அரசு ஏழைகளுக்கான அரசாக இருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருந்தது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை சாமானிய, ஏழை மக்களை பாதிக்காத வகையில் இருந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. தக்காளி விலை வரலாறு காணாத அளவில் கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே, தாய்மார்களின் கண்களில் கண்ணீர் வருகிறது. மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆனால் இதனை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் ஸ்டாலின், வழக்கம் போல விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தான் என்று பொய்யை கூறி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக இருப்பதை ஏழை மக்கள் விரும்பவில்லை. அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி சீராக்கி செம்மைபடுத்தி வருகிறார். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.

other party members joined admk

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின்பு மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தான்.மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மக்கள் விரோதமாக செயல்படும் திமுகவை தூக்கி ஏறிய தயாராகி விட்டனர். அதிமுகவில் புதியதாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்று பேசினார். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் சேர்ந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2023 5:23 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. ஈரோடு
    பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளையொட்டி
  3. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  4. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  5. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  6. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  7. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  8. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  9. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  10. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...