2வது நாளாக ஒத்துழையாமை போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
2வது நாளாக ஒத்துழையாமை போராட்டம்
X

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் 2வது நாளாக ஒத்துழையாமை போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் தற்போது 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அங்கு பணிபுரியும் ஊராட்சி மன்ற செயலாளரை திட்டி பொய்யான புகார் அளித்து தற்காலிக பணி நீக்கம் செய்ய அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2வது நாளாக ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 3 தினங்கள் பேராட்டம் நீடிக்கப்படுவதாகவும், அதற்க்குள் சுமுக முடிவு எட்டவில்லை என்றால் மாவட்ட, மாநில அளவில் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Updated On: 2021-05-26T13:13:23+05:30

Related News