மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் கோபுரத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். கோபுரத்தை தரிசனம் செய்யும் போது அதில் செடி, கொடிகள் வளர்ந்திருப்பதை பார்க்கும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் கோபுரத்தில் முளைத்துள்ள செடிகள் அகற்றப்பட வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவில் கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்து உள்ளன. இதனால் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அப்படிப்பட்ட கோபுரத்தை தரிசனம் செய்யும் போது அதில் செடி, கொடிகள் வளர்ந்து இருப்பதை பார்க்கும் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி கோபுரத்தில் வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், ஆன்மிக அன்பர்களும் எதிர்பார்க்கின்றனர்.