Begin typing your search above and press return to search.
இராசபாளையத்தில் பலத்த மழையால் வீடு இடிந்தது; இருவர் உயிர் தப்பினர்
இராசபாளையத்தில் பலத்த மழையால் வீடு இடிந்தது; இதில், இருவர் உயிர் தப்பினர்.
HIGHLIGHTS

இராஜபாளையத்தில் மழையின் காரணமாக குமரன் தெருவில் வீடு இடிந்து சேதம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் குமரன் தெரு மாடசாமி கோவில் பகுதி அருகே, கோவிந்தசாமி வயது 65. இவரது மனைவி சுப்பு 58. சிறிய மண் வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக, வீட்டுச் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்து உள்ளது. இருப்பினும், சிறிய கம்புகளை வைத்து முட்டுக் கொடுத்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் பெய்த மழையில், வீடு இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி இருவரும் உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து வட்டாட்சியர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.