Begin typing your search above and press return to search.
இராஜபாளையத்தில் மின்சாரம் தாக்கி பஞ்சாலைத் தொழிலாளி பலி
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் மின்சாரம் தாக்கி பஞ்சாலைத் தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தொட்டியபட்டி சாலையில் உள்ள பஞ்சாலையில், இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகர் இரண்டு பகுதியை சேர்ந்த ரங்க்கப்பன் மகன் பாடலிங்கம் வயது 52, பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல், பஞ்சாலைக்கு வேலை சென்றுள்ளார். அங்கு, மின் மோட்டரை பழுது பார்த்தபோது, மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் முத்துராஜ், ராதாகிருஷ்ணன் என்ற மகன்களும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி, தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவந்தை அடுத்து, இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.