/* */

இராஜபாளையம் பகுதி கண்மாய்களில் மறுசீரமைப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

இராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மறுசீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

இராஜபாளையம் பகுதி கண்மாய்களில் மறுசீரமைப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
X

இராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மறுசீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களில் மறுசீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள கொண்டனேரி கண்மாய், புளியங்குளம் கண்மாய் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவில் கண்மாய் ஆகிய கண்மாய்களின் மறுசீரமைப்பு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, இராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும், நகராட்சி குப்பைக் கிடங்கு மேலாண்மை பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜபாளையம் நகராட்சி பெரு நகராட்சியாகும். இராஜபாளையம் தாலுகாவின் தலைமையிடமாகவும் உள்ளது. இராஜபாளையம் நகராட்சி மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இராஜபாளையம் நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் அரசாணை எண்.5, நாள் 22.01.2018ன் பிரகாரம் அம்ரூத் 2017-20 திட்டத்தின் கீழ் ரூ.246.99 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளை கொண்டதாகும். நகராட்சியின் மக்கள் தொகை 1,55,000 (2020) இடைநிலை 1,90,000 (2035) மற்றும் 2050-ம் ஆண்டில் எதிர்நோக்கும் மக்கள் தொகை 2,20,000 என கணக்கிடப்பட்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நகராட்சி முழுமையும் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று மண்டலங்களிலும் தனித் தனியாக கழிவு நீரேற்றும் நிலையம் அதாவது, அன்னப்பராஜா பள்ளி பின்புறம், இந்திரா நகர் மற்றும் ஆண்டாள்புரம் பகுதியில் அமைப்பதற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் சேகரிப்பு- 157.174 கி.மீ மற்றும் கழிவு நீர் உந்து குழாய்கள் 20.642 கி.மீ. நீளத்திற்கும், கழிவு நீர் நீரேற்றும் நிலையங்கள் மூன்று எண்ணங்களும், சிறிய கழிவு நீர் உந்து ஆள் நுழைவு குழிகள் நான்கு எண்ணங்களும் மற்றும் 21.85 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

கழிவு நீர் கத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு, தன்னோட்ட கழிவு நீர் குழாய்கள் மூலமாக கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குளத்தில் சேர்க்கப்படும். இத்திட்டம் 2 சிப்பங்களாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிப்பம் -I - ல் 84% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சிப்பம் -I I - ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 64% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முடிவுற்றதும் இராஜபாளையம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள், நிலங்கள் அசுத்தம் அடையாமல் பாதுகாப்பாகவும், நகராட்சி தூய்மையாவும் அமையும். இத்திட்டத்தின் மூலம் 2,20,000 மக்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.251.20 கோடியாகும். இத்திட்டம் மத்திய நிதி உதவி திட்டமான அம்ரூத் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு, இதுவரை ரூபாய்; 161.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இப்பணிகளை நிர்ணயிக்கப் பட்டுள்ள காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், இராஜபாளையம் வட்டத்தில் உள்ள உரக்கிடங்கு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கொண்டனேரி கண்மாய், புளியங்குளம் கண்மாய் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவில் கண்மாய் ஆகிய கண்மாய்களின் மறுசீரமைப்பு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், செயற்பொறியாளர் கழிவுநீர் கோட்டம் முகமது இஸ்மாயில், செயற்பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு ராஜா, செயற்பொறியாளர் குடிநீர் வடிகால் வாரியம் பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் காளிராஜ், ராஜபாளையம் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரங்கநாதன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!