இராஜபாளையம் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல்: போலீசார் குவிப்பு

இராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல், பெண்னுக்கு அரிவாள் வெட்டு போலீசார் குவிப்பு, DSP தலைமையில் வடக்கு காவல்நிலைய போலிசார் விசாரணை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராஜபாளையம் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல்: போலீசார் குவிப்பு
X

இராஜபாளையத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இளம் பெண் தாக்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கோதைநாச்சியார் புரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே கோவில் மற்றும் நடைபாதை பிரச்சனை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மூன்று பேர் இருசக்கர வானத்தில் குடிபோதையில் சென்ற போது வாக்கு வாதம் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு பலத்த காயம் அடைத்துள்ளார்.

இதையடுத்து மற்றொரு பிரிவினரும் மது போதையில் இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இரு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கி கொண்டுள்ளனர். இதையடுத்து காயமடைந்த பெண் பிரியங்காவை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டது ராஜகுரு என்ற வாலிபர் மீது தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அவர் கால் முறிந்து ராஜபாளையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது .சம்பவ இடத்தில் ஏடிஎஸ் மாரிராஜ், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானத்தபடுத்தினர். விரைவில் இவர்களுக்கு நடைபாதை மற்றும் கோவில் பிரச்சனை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர் .

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரு பிரிவினர் மீதும் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைது செய்துள்ளனர், மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை. நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டு ஊரில் இருந்து வெளியே யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 5 July 2021 2:15 PM GMT

Related News