ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 13 மற்றும் 15 -இல் இடைத்தேர்தல்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13 மற்றும் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 13 மற்றும் 15 -இல் இடைத்தேர்தல்
X

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13 மற்றும் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13 மற்றும் 15 வார்டு காலி பதவியிடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.13 மற்றும் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 17 வாக்குசாவடி மையங்களில் காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்காளர்கள் வாக்களித்தனர்.மேலும், வாக்குசாவடியில் வாக்களர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டும், முக கவசம், கையுறை வழங்கி தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை அனுமதிக்கப்பட்டனர்.வார்டு 13 மற்றும் 15-வார்டு வாக்கு சாவடி மையங்களில், திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்

Updated On: 9 Oct 2021 5:15 PM GMT

Related News