இராஜபாளையம் தனியார் கல்லூரியில் தொல்லியல் துறை அருங்காட்சியகம் திறப்பு

இராஜபாளையத்தில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராஜபாளையம் தனியார் கல்லூரியில் தொல்லியல் துறை அருங்காட்சியகம் திறப்பு
X

இராஜபாளையம் தனியார் கல்லூரியில் தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தை இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இராஜபாளையம் தனியார் கல்லூரியில் தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தை இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து தொல்லியல் துறையில் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் அப்போதுதான் கலாச்சாரம் பழமையான பொருட்கள் குறித்து அறியமுடியும் என கூறினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் அமைந்துள்ள ராஜீக்கல் கல்லூரி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை மற்றும் ராஜீக்கல் கல்லூரி இணைந்து அமைக்கப்பட்டிருந்த தொல்லியல்துறை அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நமது தொழில் துறை சார்பில் உள்ள வரலாறுகளை கண்டறியும் வகையாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி மண்களாலான குவளைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்திய அளவில் உள்ள தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் குறித்து பொறிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இதில் மாணவ மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டு பின்பு நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர் .

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தொழில்துறை தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறும்போது, இதுபோன்ற கல்லூரிகள் செயல்பாட்டினால் தொல்லியல் சம்பந்தப்பட்ட பொருட்களை கண்டுபிடித்து அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட முடியும். இந்த கல்லூரி செய்திருக்கும் செயல்பாட்டை வரவேற்கிறேன். இதேபோன்று மாணவர்களும் தொல்லியல் துறையில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும், வரலாற்று ஆய்வுகளை ஆய்வு செய்து மூலமே பழமையான பொருட்களை கண்டறிய முடியும், அதே போல் இந்த பகுதியில் அதிகமான இடங்களில் தொல்லியல் துறை சார்ந்த ஆய்வு செய்யக் கூடிய இடங்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக T.கல்லுப்பட்டி பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல வருடங்கள் ஆகியும் பின்பு அதை தொடர முடியாத சூழ்நிலை உள்ளது .

இராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டால் அரிய வகையான முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறைக்கு கிடைக்கும். இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இதுபோன்ற ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்

Updated On: 23 Nov 2021 11:44 AM GMT

Related News