வெற்றி பெறச் செய்யுங்கள்: ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம்

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபாளையம் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வெற்றி பெறச் செய்யுங்கள்: ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம்
X

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவைகள் தீர்க்க இரட்டை இலை சின்னத்தில் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரப்புரையின் போது பேசினார்.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் இனாம் செட்டி குளம், ஒத்தப்பட்டி, கொத்தங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் நின்றவாறு அமைச்சர் பேசும் போது, ராஜபாளையம் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நான் அமைச்சராக இருக்கும் போது செயல்படுத்தி உள்ளேன். தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையடையவும், மேலும் பல்வேறு பிரச்சனைகள் தீரவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபாளையம் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updated On: 2021-03-24T13:57:46+05:30

Related News