/* */

ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயியை கரடி கடித்தது.

கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த  விவசாயியை கரடி கடித்தது.
X

விவசாயியை கரடி கடித்து காயம்(மாதிரி படம்)

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயி கரடி கடித்து காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்தவனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குப்பகுதியில் ஆதிபுத்திர அய்யனார் கோவில் பகுதியில் உள்ள தனது மாந்தோப்பில் கோபால் (வயது 60) என்ற விவசாயி மாங்காய் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த கரடி அவரை கடித்துவிட்டு தப்பியோடியது. இதில் தலை, தோள்பட்டை போன்ற இடங்களில் காயமடைந்த விவசாயி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 May 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?